சனி, 24 ஏப்ரல், 2010

IMPCOPS இன் உலக சித்தர் திருவிழா




14.04.2010 அன்று சென்னை இமேஜ் ஆடிடோரியத்தில் உலக சித்தர்கள் திருநாள் வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு பேசிய பெரும்பாலான பெரியோர்கள் பரம்பரை மற்றும் மரபு வழி மருத்துவர்கள் அவர்களின் வழி தோன்றல்கள் இடயே பல அற்புதமான மருத்துவ முறைகள் உள்ளன ஆதலால், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களை முன்னிலை படுத்த வேண்டும் என்று கூறினர்.


.




மரு. மணிமேகலை கண்ணன் HPSM (கி.ஆ.பே. அவர்களின் மகள்.


எங்கள் பாரம்பரியமே சித்த மருத்துவத்தை மதித்து போற்றி பாராட்டி வரும் குடும்பம். நானும் திருமதி குதிஷியா காந்தி IAS அவர்களும் தமிழ்நாட்டில் பல மாவட்டத்திற்கும் சுற்று பயணம் செய்து பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சார்ந்த பல புள்ளிவிபரம் எடுத்துவந்து மன்றத்துக்கு சமப்பித்தோம். தற்போது மன்றம் இயங்காதது வருத்தமே. இந்த விழாவின் மன நிறைவே பாரம்பரிய சித்த மருத்துவர்களும் பட்டதாரி சித்த மருத்துவர்களும் பெருமளவில் கலந்துக்கொண்டு இருப்பது. சித்த மருத்துவத்துக்கு தனி வாரியம் அல்லது மன்றம் ஏற்படுதிக்கொடுக்கவேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


.




ஷீலாராணிசுங்கத் IAS அவர்கள்.


சித்த மருத்துவத்திற்கு தனி நல வாரிய அமைதல் நல்லது M.B.B.S.படிக்க முடியாது போய்விட்டதே என்று கவலைகொள்ளாது .அல்லோபதி மருத்துவத்திற்கு அடிப்படியான சித்த கல்வி படிகுறோம் என்று கர்வத்துடன் பயிலுங்கள் என்று சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் .மருதுவக்கப்பீடு அலோபதி மருத்துவத்திற்கு கொடுப்பது போலவே சித்த மருத்துவத்திற்கு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் M.R.K. அவர்களை கேட்டுகொண்டார் மேலும் மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்றும் அல்லோபதி மருத்துவத்திற்கு கவுன்சலிங் வைக்கும் தேதிலேயே சித்த மருத்துவத்திற்கும் வைக்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்


..


மாண்புமிகு அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம்


கலைஞர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சித்த மருத்துவத்திற்கு சிறப்பு செய்ய தவறியது இல்லை . தொன்மையான சித்த மருந்துகளை எத்தனைக் கோடிக்கு ஆகினும் (அரசு மருத்துவமனைக்கு) வாங்க தயராக உள்ளோம் .சித்த மருத்துவ மாணவர்கள் பொறுப்போடு பயின்று சேவை உள்ளத்துடன் வெளிவர வேண்டும் .மேலும் பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு சித்த மருத்துவர் J.D. கிருஷ்ணமூர்த்தி அவர்களை மனதார பாராட்டுகிறேன்




. .


குத்ஷ்யா காந்தி I.A.S.


சித்த மருத்துவத்துறைக்கு என்னை நியமித்த போது ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தேன் .அனால் உள்ளே வந்த பிறகு கண்ணை கட்டிக்காட்டில் விட்டது .போல் உணர்ந்தேன் .மிக பழமையான ஆங்கிலேயர் காலத்திய " சர் உஸ்மான் ரிப்போர்ட் " என்ற புத்தகம் கிடைத்தது . அதன் பிறகுதான் சற்று தெளிவு கிட்டியது. அதன் அடிப்படையில் சித்த மருத்துவ கௌன்சிலில் பல செயலாக்கங்களை கொண்டுவந்தேன். தற்போது அந்த கௌன்சிளுக்கு உயிர் இல்லை. மருத்துவர்கள் தங்கள் வாங்கும் கச்சாபொருள்களையும் செய்துமுடித்த மருந்துகளையும் சோதித்துக்கொள்ள பொது ஆய்வகங்கள் ஏற்ப்படுதவேண்டும். இது சென்னை மாநகரத்தில் மட்டும்அல்லாது திருச்சி திருவனந்தபுரம் போன்று பரவலாக அந்தந்த பகுதியில் உள்ள சின்ன சின்ன மருந்து தயாரிப்பாளர்கள் உபயோகித்து கொள்ளும் இயக்கப்பட வேண்டும் .சிக்கன் குன்னியாவுக்கு ஆங்கிலேய மருத்துவர்களே சித்த மருத்துவமனையில் இதற்கு மருந்து கிட் தருகிறார்கள் .வாங்கி உபயோகியுங்கள் என்று நமது நில வேம்பு குடிநீருக்கு சிபாரிசு செய்கிறார்கள் .மேலும் சித்த மருத்துவத்துறைக்கு I.A.S.முடித்தவர்களை தலைவராக போடுவதற்கு பதிலாக சித்த மருத்துவத்துறையை சார்ந்தவர்களையே தலைவராக போடுவது சாலசிறந்தது


.


லக்ஷ்மி காந்தன் பாரதி .I.A.S.


சித்த மருந்துகளை தரநிர்ணயம் செய்யவேண்டும் .மேலும் நான் தலைவராக பொறுப்பில் இருந்த பொது பாரம்பரிய மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்றினோம் .அதற்கு மத்திய அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .தங்கள் மாநிலத்தில் தாங்கள் இச்சட்டம் இயற்றிகொள்வதில் தவறு இல்லை என்று .நான் தற்பொழுது சித்த மெடிக்கல் கௌன்ச்ளின் திட்டக்குழு உறுப்பினராக இருகின்றேன் . என்னால் இயன்ற அளவு பாரம்பரிய மற்றும் பட்டதாரி மருத்துவர்களுக்காக பாடுபடுவேன்


.


மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் .


பெரும்பாலான சித்த மருத்துவர்களுக்கு சித்த மருந்துகள் மீது நம்பிக்கை இல்லை .நமக்கே நம்பிக்கை இல்லையெனில் பொதுமக்களுக்கு எங்கிருந்து நம்பிக்கை வரும் ?


1972 இல் இந்தியன் மெடிக்கல் கௌன்சிலில் ஆயுர்வேதா இங்குளுடிங் சித்தா என்று விளித்து வரப்பட்டது. இதனை அப்போதே எதிர்த்தவன்.


சித்த மருத்துவமும் ஜோசியமும் ஒன்றுக்கு ஒன்று உடன்பட்டது ஆயுனும் இரண்டையும் ஒருவரே ஒருவரே செய்யாதீர்கள், நமது நிலை தாழ இது காரணமாக இருந்துவிடும்.


இந்த அரங்கம் நிறைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . நம்கோரிக்கை நிறைவேறவேண்டுமானால் நமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்., காலை விழாவில் கலந்துகொண்ட உங்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் என்னிடம் விழா சிறப்பாக நடந்ததை கூறினார்கள்.. தங்கள் தேவை என்ன என்பதை நானறிந்த காரணத்தால் கண்டிப்பாக பரிந்துரை செய்கிறேன்.


இதுபோன்ற விழாக்களில் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுக்கு பதில் சித்த மருத்துவ புத்தகங்களை தாருங்கள் . நிறைய சித்த மருத்துவ புத்தங்கள் வெளிவர நானும் காரணமாய் இருந்து இருக்கிறேன்.


டாக்டர் உத்தமராயன், டாக்டர் அனந்தர், டாக்டர் சிற்சபை, டாக்டர் அனந்தகுமார் போன்றோகள் துணையுடன் பல சித்த மருத்துவ புத்தகங்கள் வெளிவந்துள்ளன .


பழனி தண்டாயுதபாணி திருக்கோவி முலமாக டாக்டர் அப்துல்லா அவர்களின் தொகுப்பை புத்தகமாக வெளி இட்டுள்ளேன். பரத நாட்டியத்தை கூட தமிழ் நாட்டியம் என்று கூறுவதே சரி.


மேலும் சித்த மருத்துவத்தில் முதல் முதலாக பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ள டாக்டர் J.D.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மனதார பாராட்டுகிறேன்.


தொகுப்பு மரு. லெ. பூபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக